நெப்போலியனின் வருங்கால மருமகள் இவங்க தானா? அடேங்கப்பா அடுத்த ஹீரோயின் மாதிரி இருக்காங்களே!நெப்போலியனின் வருங்கால மருமகள் இவங்க தானா? அடேங்கப்பா அடுத்த ஹீரோயின் மாதிரி இருக்காங்களே!

நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகள் இவங்க தானா: தமிழ் திரைஉலகில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என எல்லா கேரக்டரிலும் புகுந்து விளையாடியுள்ளார். அதன் பிறகு சினிமாவில் இருந்து அரசியலுக்கு தாவிய அவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

அதில்  மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு எனும் அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவரால் நடக்க முடியாது.

அவரின் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்ற அவர், அங்கேயே செட்டில் ஆனார். மேலும் ஐடி நிறுவனத்தை திறந்து வைத்து ஏகப்பட்ட இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறார்.

இந்நிலையில் மூத்த மகன் தனுஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக நெப்போலியன் தெரிவித்து இருந்தார். ஆனால் அவருக்கு வரப்போகும் மருமகள் குறித்து எந்த ஒரு தகவலும் கொடுக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது மணப்பெண் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Also Read: சூப்பர் ஸ்டார் ஆரம்பித்து வைத்த செயலி – இழுத்து  மூடும் சௌந்தர்யா ரஜினிகாந்த் – என்ன காரணம் தெரியுமா?

அதாவது நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகள் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் என்றும் அவரின் பெயர் அக்ஷயா என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் அண்மையில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்வில் நெப்போலியன் தம்பதிகள் கலந்து கொண்டுள்ள போது மாப்பிள்ளை தனுஷ் வீடியோ காலில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *