சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை (04.10.2024) டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் நாளை (04.10.2024) டிஸ்சார்ஜ்
படம் வெளியாவதற்குள் வசூல் மழையில் படம் நனைந்து வருகிறது. நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதாவது ரஜினியின் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சையின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இருக்கும் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள பட்டதாக கூறப்படுகிறது.
தளபதி 69 படத்தில் இணைந்த பிரபல நடிகர் – யார் என்று தெரியுமா?
இதனை தொடர்ந்து ஐசியூவில் இருந்து வந்த அவரை தற்போது தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இன்று நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை டிஸ்சார்ஜ் என மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது
ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி
அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா
CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி”