புதிய ஜோடியாக சஞ்சீவ் வெங்கட் மற்றும் ஸ்ருதி ராஜ் இணைந்து நடித்து வந்த லட்சுமி தொடரில் இருந்து விலகல் குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
லட்சுமி சீரியல்:
சீரியலுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் இந்த ஆண்டு கடந்த மார்ச் தொடரப்பட்ட தொடர் தான் லட்சுமி. இந்த தொடரில் லீடு கதாபத்திரத்தில் சஞ்சீவ் வெங்கட் மற்றும் ஸ்ருதி ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் மொத்தம் 100 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
லட்சுமி தொடரில் இருந்து சஞ்சீவ் வெங்கட் விலகல் – அவருக்கு பதிலாக களமிறங்கும் பிரபல நடிகர்!
ஒரு பெண்ணை பற்றிய கதையாக உருவாகி வரும் இந்த சீரியலை பாலசேகரன் என்பவர் எழுதி வருகிறார். தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, லட்சுமி சீரியலில் நாயகனாக நடித்து வந்த சஞ்சீவ் வெங்கட் தற்போது இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
பவர்ஸ்டார் திடீரென மருத்துவமனையில் அனுமதி – அடக்கடவுளே என்ன ஆச்சு அவருக்கு?
மேலும் அவருக்கு பதிலாக மகராசி சீரியல் புகழ் ஆர்யன் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்