
திரைத்துறையில் முக்கிய நடிகராக இருக்கும் சாயாஜி ஷிண்டே நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் சாயாஜி ஷிண்டே.. குறிப்பாக விஜய்யுடன் சேர்ந்து நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை காட்டி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும் அவர் வில்லனாகவும் மட்டுமின்றி குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள சாயாஜி ஷிண்டே கடந்த சில நாட்களாக லேசான நெஞ்சு வலியை எதிர்கொண்டு வந்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சதாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பரிசோதனை செய்யப்பட்ட போது அவரது இதயத்தின் வலது புறத்தில் அடைப்பு இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடைபெற்றது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். மேலும் அவர் மீண்டு வீட்டிற்கு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.