தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஷாம் தன்னுடைய சினிமா வாழ்க்கையை வாரிசு நடிகர்களால் தான் இழந்தேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.
தற்போதைய சினிமா உலகில் நடிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அது போதாதென இயக்குனர், இசையமைப்பாளர்களும் கூட தற்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமா பிரபல நடிகர்கள் தங்களுடைய மகனையோ, மகளையோ சினிமாவில் ஹீரோவாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதற்கு உதாரணம் தனுஷ், சிம்பு, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, விஷால் ஆகியோரை சொல்லலாம்.
பிக்பாஸ் சீசன் 8ல் 3 எவிக்சன்.., அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்.., யார் தெரியுமா?
இப்படி இருக்கையில் வாரிசு நடிகர்களால் சினிமாவில் வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனையோ பேர். அப்படி பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் பாலா, அன்பே அன்பே, லேசா லேசா, இயற்கை, ABCD, மனதோடு மழைக்காலம் மற்றும் இன்பா உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் ஷாம். மேலும் அவரது சினிமா கெரியரில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது, இயற்கை திரைப்படம் தான். இப்படம் இப்பொழுது வரை ரசிகர்களுக்கு பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் பறிபோனது.
வாரிசு நடிகர்களால் சினிமா வாய்ப்பை இழந்தேன்.., பிரபல நடிகர் ஷாம் உருக்கம்.., யாரை சொல்கிறார்?
இதனால் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதன்படி, கடந்த ஆண்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார். மேலும் நான் அறிமுகமான சமயத்தில் தான் வாரிசு நடிகர்களான, சிம்பு, தனுஷ், ஜீவா, விஷால் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். இதனால் தான் எனக்கு பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்தது. ஒரு விதத்தில் எனது சினிமா பயணம் வெற்றி அடையாமல் போனதற்கு வாரிசு நடிகர்கள் தான் காரணம் என்று உரக்க கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம்.., தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!!
எதிர்நீச்சல் 2வில் இருந்து தூக்கிய இயக்குனர்.., கண்கலங்கி எமோஷனல் பதிவு போட்ட நடிகை!!
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!