நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டி ? எந்த கட்சி தெரியுமா ? - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டி ? எந்த கட்சி தெரியுமா ? - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டி?. தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிவருகிறது.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட வாய்ப்பிருப்பதாக தினத்தந்தி அண்மையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசியை குறிவைத்த கிருஷ்ணசாமி ! கூட்டணி கணக்கை தொடங்கிய அதிமுக -கிருஷ்ணசாமியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் !

இதன் அடிப்படையில் நடிகர் வடிவேலு திமுக உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் தான் அவர் கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர் என்று சொல்லப்படுகிறது. மேலும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்த பிறகு அமைச்சர் உதயநிதியுடன் நெருக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் நடிகர் வடிவேலு திமுக சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *