GOAT திரைப்படத்தின் தமிழக வெளியிட்டு உரிமை - ரோமியோ நிறுவனம் கைப்பற்றியதாக படக்குழு அறிவிப்பு !GOAT திரைப்படத்தின் தமிழக வெளியிட்டு உரிமை - ரோமியோ நிறுவனம் கைப்பற்றியதாக படக்குழு அறிவிப்பு !

தற்போது இளைய தளபதி நடிப்பில் வெளியாக உள்ள GOAT திரைப்படத்தின் தமிழக வெளியிட்டு உரிமை யை ரோமியோ நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான இளையதளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). மேலும் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, மோகன், மீனாட்சி சவுத், பிரஷாந்த், பிரபு தேவா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

“கோட்” மூவியில் கேப்டன் விஜயகாந்தை காட்ட கூடாது – பிரேமலதா அதிர்ச்சி பேட்டி!!

தற்போது GOAT திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள GOATதிரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரோமியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வகமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *