தி கோட் திரைப்படத்திற்கு யு ஏ சான்றிதழ் - போஸ்டருடன் புதிய அப்டேட்டை பகிர்ந்த வெங்கட் பிரபு !தி கோட் திரைப்படத்திற்கு யு ஏ சான்றிதழ் - போஸ்டருடன் புதிய அப்டேட்டை பகிர்ந்த வெங்கட் பிரபு !

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் திரைப்படத்திற்கு யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் படத்தின் போஸ்டருடன் புதிய அப்டேட்டை வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் பிரசாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. Goat movie U/A certificate

இப்படத்திலிருந்து தற்போது வரை ‘விசில் போடு, சின்ன சின்ன கண்கள்,ஸ்பார்க், போன்ற பாடல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இப்பாடல்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை என்றாலும்,

விஜய் பிறந்தநாளான கடந்த ஜூலை 22ம் தேதி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோவும், கடந்த 17ம் தேதி வெளியான ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து படக்குழு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து படத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஏஐ தொழில் நுட்பம் மூலம் நடிக்க வைக்க அனுமதி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தில் 1500 தியேட்டரில் தவெக கட்சி கொடி – தலைவர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்?

இந்நிலையில் இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் படத்திற்கு யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *