
தென்னிந்திய தமிழ் சினிமாவில் செல்ல பிள்ளையாக இருந்து தற்போது அரசியலில் ஒரு கலக்கு கலக்கி வந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். ஆரம்பத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் கடைசியாக தனது மகனுடன் சேர்ந்து நடித்தார். அதன் பின்னர் தனது மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று கருதி, தேமுதிக என்ற கட்சியை வழி நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சளி, இருமல் காரணமாக விஜயகாந்த் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது எதிர்பாராத விதமாக கேப்டன் விஜயகாந்த் காலமானார். தற்போது ரசிகர்கள் முதல் தொண்டர்கள் வரை கண்ணீர் கடலில் மூழ்கி வருகின்றனர். பிரபலங்கள் முதல் அரசியவாதிகள் வரை தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.