என்னது.., 2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணியா? நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி!!என்னது.., 2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணியா? நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி!!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி மக்களுக்கு பணியாற்ற தயாராகிவிட்டார் தளபதி விஜய். 2026 நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று தலைவர் விஜய் தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளில் அவர் தீவிரமாக இருந்து வருகிறார். அவரை தொடர்ந்து நடிகர் விஷாலும் கட்சி தொடக்க போகிறார் என்று இணையத்தில் தகவல் வெளியாகி நிலையில் எதிர்காலத்தில் இயற்கை முடிவெடுக்க வைத்தால் தயங்க மாட்டேன் என ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

அதில் அவர், அரசியல் என்பது ஒரு பொதுப்பணி ஆகும். அதில் யார் வேண்டுமானாலும் மக்களுக்கு தொண்டு செய்யலாம் ஆனால் அரசியல் ஒரு பொழுது போக்கு இல்லை. 2026-ல் தேர்தல் வருகிறது. மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. விஜய்க்கு வாழ்த்துக்கள். விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பேன் என்று கேட்டால், இப்பொழுது சொல்ல முடியாது. தேர்தல் நெருங்கிய பின்னரே ஏதுவாக இருந்தாலும் சொல்ல முடியும். ஏற்கனவே நிறைய கட்சிகள் இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்ய ஒரு கட்சி இருந்தாலும் போதும். அதையும் மீறி ஒருவர் வருகிறார் என்றால், அவரால் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் தான் என்று கூறியுள்ளார். 

எல்லை மீறி போறீங்கடா.., ஆப்ரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய மருத்துவர்.., அடுத்து நடந்த டிவிஸ்ட்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *