
தமிழ் சினிமாவில் பத்து வருஷமா கிடப்பில் இருந்த “மதகஜராஜா” திரைப்படம்: தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு பெயரை உருவாக்கி கொண்டவர் தான் இயக்குனர் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல ரீச்சை பெற்றது. குறிப்பாக இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது.
இதனை தொடர்ந்து சுந்தர். சி அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்து வரும் நிலையில், அவர் எடுத்து கிடப்பில் இருக்கும் ஒரு படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து கடந்த 2013ம் ஆண்டு உருவான திரைப்படம் தான் “மதகஜராஜா”. இப்படத்தில் அஞ்சலி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தானம், கோவை சரளா, மணிவண்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

Also Read: ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் இந்தியன் 2 திரைப்படம் – மொத்தம் இத்தனை கோடி வசூலா?
பிலிம் பேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த திரைப்படம் சில காரணத்தால் வெளியிட முடியாமல் போனது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இப்படத்தை குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது சூப்பர் நியூஸ் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
பத்து வருஷமா கிடப்பில் இருந்த “மதகஜராஜா” திரைப்படம்
அதாவது சமீபத்தில் சுந்தர். சிக்கு நெருக்கமான நபர்களுக்கு மட்டும் படம் திரையிடப்பட்டதாம். கண்டிப்பாக இப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று நெருக்கமானவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
எனவே இப்படம் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
“மகாராஜா” படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
பிரபல நடிகர் கூட்டணியில் “DD ரிட்டர்ன்ஸ் பார்ட் 2”
பாலாவின் “வணங்கான்” பட டிரைலர் ரிலீஸ்