விஷாலின் அடுத்த படத்தை இயக்குகிறார் GVM - இசையமைப்பாளர் யார் தெரியுமாவிஷாலின் அடுத்த படத்தை இயக்குகிறார் GVM - இசையமைப்பாளர் யார் தெரியுமா

நடிகர் விஷாலின் அடுத்த படத்தை இயக்குகிறார் GVM என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து புதிய படம் தொடர்பான அறிவிப்பு விரைவில்அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவனரான விஷால். செல்லமே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.அதைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். அத்துடன் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ரத்னம் திரைப்படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தப்படம் திரைப்படம் குறித்த தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் விஷால் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது மலையாள நடிகர் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

KGF 3யில் நடிக்கும் தல அஜித்!! அப்படி போடு ரசிகர்களுக்கு காத்திருக்கும் வெறித்தனமான சம்பவம்

அத்துடன் ஏ.ஆர். ரகுமான் இசையில் விஷால் நடிப்பில் உருவாக உள்ள முதல் திரைப்படம் இதுவாகும். வரும் செப்டம்பர் மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷால் – கவுதம் வாசுதேவ் மேனன் இணையும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *