தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சக்க போடு போட்டது. இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஒரு இளம் பெண்ணுடன் விஷால் ஓடிய வீடியோ வைரலான நிலையில், தற்போது இது குறித்து விஷால் தனது X பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் உடல் நாளை தகனம்.., எந்த இடத்தில் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!
அதில் அவர் கூறியிருப்பதாவது, அண்மையில் தன்னை பற்றி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மன்னித்து விடுங்கள் நண்பர்களே. அது என்னை எனது நண்பர்கள் பிராங்க் செய்த வீடியோ தான் அது. அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அதில் எனக்குள் இருந்த குழந்தையை வெளிக்காட்டிய உணர்வு அது என்று இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.