பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி’ சகுந்தலா காலமானார்:தமிழ் சினிமாவில் 70ஸ், 80ஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா. சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சேர்ந்த இவர் நடன நிகழ்ச்சி மூலம் சென்னைக்கு வந்து, நடிக்க வாய்ப்பு கிடைத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் நடித்த கை கொடுத்த தெய்வம் (1964), நேதாஜி (1966), நான் வணங்கும் தெய்வம் (1963) உள்ளிட்ட படங்கள் இவரை பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைய செய்தது.
பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி’ சகுந்தலா காலமானார்
சி.ஐ.டி சங்கர் (1970) படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்த பிறகுதான் இவரை சி.ஐ.டி சகுந்தலா என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வந்தனர். தற்போது அவர் வயது மூப்பு காரணமாக சினிமாவை விட்டு விலகி பெங்களூருவில் இருக்கும் தனது மகள் வீட்டில் வகித்து வந்தார்.
Also Read: விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது – எந்த தொடர் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
இப்படி இருக்கையில் அவருக்கு, நேற்று (செப்.17) நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். actress cid shakuntala
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது
விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்
விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?
ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்