தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை காஜலுக்கு திடீர் மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை !தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை காஜலுக்கு திடீர் மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை !

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மக்களவை தொகுதியின் கட்சி வேட்பாளரான காஜல் நிஷாத் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல போஜ்புரி நடிகையும், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மக்களவை தொகுதியின் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக விளங்கி வருபவர் தான் காஜல் நிஷாத். தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

உடனே அவரை  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், காஜலுக்கு நீரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இந்நிலையில் கஜோலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரின் உடல்நிலை மோசமடைந்து. இதனை தொடர்ந்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு ஈசிஜி பரிசோதனை மேற்கொண்டு பார்த்ததில் , மாரடைப்பு அறிகுறி இருப்பது தெரியவந்தது. தற்போது அவர் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *