இயக்குனர் பாலா என்ன அடிக்கல.., ஆனா இதை செஞ்சாரு.., உண்மையை உடைத்த மமிதா!!இயக்குனர் பாலா என்ன அடிக்கல.., ஆனா இதை செஞ்சாரு.., உண்மையை உடைத்த மமிதா!!

இயக்குனர் பாலா மமிதா

கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவை புரட்டி போட்ட செய்தி என்றால் இயக்குனர் பாலா நடிகை மமிதா பைஜு அடித்தது பற்றி தான். இதனால் பாலாவை பலரும் திட்டி வரும் நிலையில், இது குறித்து மமிதா பைஜு விளக்கம் கொடுத்துள்ளார், அதில் அவர், ” எனக்கும் பாலா சாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டீர்கள். அவர் எனக்கு அப்பா மாதிரி, நாங்கள் இருவரும் இப்படி தான் பழகி வருகிறோம். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னை அக்கறையாக பார்த்து கொண்டார். அவர் என்னை அடிக்கவில்லை என்று கூறினார்.

அப்போது ஏன் படத்தை விட்டு விலகுனீர்கள்  என்று கேட்டதற்கு, சூர்யா சார் படத்தில் இருந்து விலகியவுடன் படம் எந்த அளவுக்கு வர போகிறது என்ற பயம் எனக்குள் இருந்தது. மேலும் இந்த படத்திற்காக 6 மாதம் வரை கால்ஷீட் கேட்டார்கள். ஏற்கனவே இந்த படத்திற்காக ஒரு படத்தின் பட வாய்ப்பு நிராகரித்தேன். மேலும் 6 மாதம் என்றால் முடியாத காரியம். அதனால் தான் படத்தை விட்டு விலகினேன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் பாலா மீது இருந்த கரையை துடைத்து அவரை அடித்ததாக பரவிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மலையாள படமான “பிரேமலு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.  

விஜய் படத்தில் அவ்வளவு கெஞ்சினேன்., கட்டாயப்படுத்துனாங்க., அதா அதை செஞ்சேன்.., நடிகை கிரண் ஓபன் டாக்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *