நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு - பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கடும் தாக்கு !நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு - பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக கடும் தாக்கு !

தற்போது நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு குற்றசாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.

அந்த வகையில் Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு மற்றும் திருமண கிளிம்ஸுடன் வெளியானது.

மேலும் நயன்தாராவின் குழந்தை பருவம் முதல் இளம் வயதில் அவர் சந்தித்த வெற்றிகள், துயரங்கள், விக்னேஷ் சிவனுடனான காதல் திருமணம் வரை அனைத்தையும் ஆவணப்படமாக வெளியாகும் என கூறப்பட்டது.

அந்த வகையில் Nayanthara Beyond the Fairy Tale’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், வரும் 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவண படத்தை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நயன்தாரா தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை தற்போது முன்வைத்துள்ளார்.

மேலும் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு குற்றசாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார்

இதனை தொடர்ந்து அந்த அறிக்கையில், ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில்,

உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்கான எங்கள் எல்லாப் போராட்டங்களும் தோல்வியடைந்தன.

மேலும் 2 ஆண்டுகளாக காத்திருந்தும் எந்தவித பலனும் அளிக்காத நிலையிலேயே, மீண்டும் படப்பிடிப்பை நடத்தி, மறு தொகுப்பு செய்து தற்போது வெளியாகவுள்ள ஆவணப்படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அத்துடன் ‘நானும் ரௌடிதான்’ திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம், இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள்.

நாகர்ஜுனா குடும்பத்தில் சேரும் கோட் பட நடிகை – விரைவில் டும் டும் டும் தான் போங்க!

ஆனால், அந்த வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும்.

மேலும் தடையில்லா சான்றிதழ் (NOC) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன்.

ஆனால் முழுக்க முழுக்க என் மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று நடிகர் தனுஷை நோக்கி குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *