நடிகை சாய் பல்லவி:
பிரேமம் பட மூலம் உலகமெங்கும் பிரபலமானவர் தான் நடிகை சாய் பல்லவி. தமிழில் மாரி 2, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK 21 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தெலுங்கில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவருக்கு பூஜா கண்ணன் என்ற ஒரு தங்கை இருக்கிறார் என்று நம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இவரும் ஒரு படத்தில் நடித்துள்ளார். அதாவது, சமுத்திரக்கனி நடித்த “சித்திரை செவ்வானம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பூஜா கண்ணன் தனது காதலனை சோசியல் மீடியாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில் கூறியிருப்பதாவது, இந்த அழகான அன்புடையவர் தான் எனக்கு காதலிக்க சொல்லி கொடுத்தவர். இவர் தான் வினித். வருங்காலத்தில் என்னோட வாழ்க்கை துணையாக இருக்க போகிறார் என்று தனது வருங்கால கணவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவிக்கு கல்யாணம் எப்போது என்று கேட்டு வருகின்றனர்.