நடிகை சங்கவி:
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கதாநாயகிகளில் ஒருவர் தான் நடிகை சங்கவி. இவர் அஜித்தின் அமராவதி படத்தில் என்ட்ரி கொடுத்து, விஜய்யுடன் சேர்ந்து ரசிகன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்து அசத்தியிருப்பார். இதனை தொடர்ந்து சரத்குமார், பிரபு என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து பிசியான நடிகையாக மாறினார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஐடி நிபுணரான வெங்கடேஷை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சீரியலில் நடிக்க தொடங்கிய போது அவர் கர்ப்பமானது தெரிய வந்தது. இருப்பினும் தொடர்ந்து நடித்து வந்த நிலையில் எட்டாவது மாதத்தில் குழந்தைக்கு இதய துடிப்பு இல்லை என்று கூறி அபார்ஷன் செய்யப்பட்டது. இதனால் தான் ஷூட்டிங் போனது தான் காரணம் என்று கூறி மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தார்.
“இலக்கியா” சீரியலில் இருந்து விலகிய ஹீமா பிந்து.., ஹீரோயின் கேரக்டரை கொக்கி போட்டு தூக்கிய நடிகை? போட்டோ வைரல்!!
இதனை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் மீண்டும் அவர் கருவுற்ற நிலையில், முன்பு நடந்தது போல் எட்டாவது மாதத்தில் குழந்தைக்கு ஹார்ட் பீட் இல்லை என்று அபார்ஷன் செய்துள்ளார். தொடர்ந்து இரண்டு அபார்ஷன்களை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கர்ப்பமாகி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் தனது கணவர் மற்றும் தனது இரண்டு வயது குழந்தையுடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டுள்ளார்.