தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வரும் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில், இப்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி தொடர்ந்து நடிப்பில் பிசியாக இருந்து விஜய்யின் கெரியரில் முக்கிய படமாக இருந்து வரும் திரைப்படம் தான் வேலாயுதம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இப்படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை சரண்யா மோகன். இவர் இதற்கு முன்னர் வெண்ணிலா கபடி குழு, ஈரம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இப்படி தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையத் தொடங்கின.
அதன் பின்னர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சரண்யா மோகன் தனது கணவர், மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மகள் அப்படியே அம்மாவை உரிச்சு வச்சிருக்காரு என்று கூறி வருகின்றனர்.