Home » சினிமா » நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம் – வீட்டிற்கு நுழைந்த மர்ம நபர்கள் – என்ன நடந்தது?

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம் – வீட்டிற்கு நுழைந்த மர்ம நபர்கள் – என்ன நடந்தது?

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம் - வீட்டிற்கு நுழைந்த மர்ம நபர்கள் - என்ன நடந்தது?

நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டிற்கு நுழைந்த நிலையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி நடிகை சோனாவிற்கு நேர்ந்த விபரீதம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சோனா. இவர் தெலுங்கில் கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்

அதுமட்டுமின்றி தமிழில் ஷாஜகான், ஜித்தன், குசேலன், மிருகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பை தாண்டி ஆடை ஆபரணங்கள் விற்கும் யுனிக் என்ற ஒரு கடையையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி யுனிக் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர், 28வது தெருவில் வாழ்ந்து வருகிறார்.

இப்படி இருக்கையில் நேற்று இரவு அவர் வீட்டின் முகப்பு வாயில் வழியாக இரண்டு திருடர்கள் வந்துள்ளனர்.  ஏசி யூனிட்டை திருட முயன்றதாக கூறப்படுகிறது.  

நாய் அவர்களைப் பார்த்துக் குறைக்க ஆரம்பித்த நிலையில் சோனா வெளியே வந்து பார்த்துள்ளார். உடனே அந்த திருடர்கள் தப்பிக்க முயன்ற நிலையில் சோனா கூச்சலிட்டு உள்ளார்.

Also Read: VIP பட்டதாரிகளே குட் நியூஸ் – விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

இதனால் ஆத்திரம் அடைந்த திருடர்கள் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த  நடிகை  சோனா அப்போது தப்பிச் செல்ல முயன்று கீழே விழுந்ததில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். மேலும் வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்கள் யார் எனத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது

ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி

அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா

CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top