நடிகை டாப்ஸிக்கு திருமணம்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் டாப்ஸி. தமிழில் ஆடுகளம் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த இவர் தொடர்ந்து காஞ்சனா 2, கேம் ஓவர், ஆரம்பம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் கலக்கி கொண்டிருக்கும் இவர், கிட்டத்தட்ட 10 வருடங்களாக மதியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறார். மேலும் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என தகவல் வெளியாகிய வண்ணம் இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் டாப்ஸி தனது காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்து விட்டாராம். அதாவது நடிகை டாப்ஸிக்கும் மதியாஸ் போவுக்கும் அடுத்த மாதம் இறுதிக்குள் திருமணம் நடைபெற இருக்கிறதாம். அதுவும் அவர்களது கல்யாணம் உதய்பூரில் சீக்கிய கிறிஸ்தவ முறைப்படி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மதியாஸ் போ இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளராக விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்களது திருமணம் குறித்து அவர்களிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.