அப்படி விஜய் என்ன தான் செய்றாருனு பார்க்கலாம்.., ஆனா., எனக்கு அந்த ஆசை இருக்கு., முன்னணி நடிகை ஓபன் டாக்!!அப்படி விஜய் என்ன தான் செய்றாருனு பார்க்கலாம்.., ஆனா., எனக்கு அந்த ஆசை இருக்கு., முன்னணி நடிகை ஓபன் டாக்!!

நடிகர் விஜய் சினிமாவை தாண்டி அரசியலுக்கு வர போகிறார் என்ற செய்தி கடந்த சில மாதங்களாவே எந்த பக்கம் சென்றாலும் ஒலித்து கொண்டே இருந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்படி தனது கட்சி பெயருக்கு தமிழக வெற்றி கழகம்” என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும் அரசியலில் அவர் வருகையை குறித்து கட்சி தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகையாக இருந்து வரும் வாணி போஜன் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். தற்போது விஜய் வந்திருக்கிறார். அவரை நான் வரவேற்கிறேன். கண்டிப்பாக அவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். அப்படி அவர் என்ன மாற்றங்கள் கொண்டு வர போகிறார் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம். எனக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைகள் இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அவருக்கு அரசியல் ஆசை இருப்பதால் விஜய் கட்சியில் சேர வாய்ப்பு இருக்கிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

2024 தமிழக முதல் சட்டசபை கூட்டம்.., கேரளாவை போல் இரண்டு நிமிடத்தில் உரையை முடித்த கவர்னர் ஆர்.என்.ரவி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *