அடக்கடவுளே.., பிரபல காமெடி நடிகர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!அடக்கடவுளே.., பிரபல காமெடி நடிகர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பிரபல காமெடி நடிகர் மரணம்

மேடை நாடகங்களில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பை வெளிக் காட்டி சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து வெள்ளித்திரை வரை சென்றவர் தான் பழம்பெரும் நடிகர் அடடே மனோகர். அவர் மறைந்த ஆச்சி மனோரமா போல் கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேலாக மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து கலைவாணர் விவேக், வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த காமெடி சீனில் வந்து அதிக ஸ்கோர் அடித்து ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.

அதன்படி அவர் கிட்டத்தட்ட 35 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி நேற்று (27.02.2024) இரவு உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மழைக்கு லீவு.., தமிழகத்தை புரட்டி எடுக்கும் வெயில்.., மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *