அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல். தமிழ்நாடு மின்சார வாரியத்துக்காக அதானி நிறுவனம் சார்பில் 2014 ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி 69,925 டன் நிலக்கரி எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டும் தலா 70,000 டன் நிலக்கரியுடன் 24 கப்பல்கள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல்
அந்த வகையில் இந்த நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு அதிக விலைக்கு விற்றது தற்போது அம்பலமாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அதானி நிறுவன நிலக்கரி மோசடி :
அத்துடன் இந்தோனேசிய துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மதிப்பை இந்திய துறைமுகத்திற்கு கொண்டு வரும் போது பலமடங்கு உயர்த்திக்காட்டி மோசடியில் ஈடுபடுவதாக அதானி நிறுவனம் மீது தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் திட்டமிட்டு செய்யப்படும் குற்றங்கள் மற்றும் ஊழல் செய்யும் நிறுவனங்களை வெளிக்கொண்டு வரும் ஓசிசிஆர்பி (OCCRP) என்ற சர்வதேச அமைப்பு அதானி நிறுவன நிலக்கரி ஊழலை ஆதாரங்களுடன் வெளிகொண்டுவந்துள்ளது.
இதனையடுத்து இந்தோனேசியாவில் ஒரு டன் ரூ.2330 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரியானது தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு டன் ரூ.7650-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிலக்கரியின் விலை மற்றும் தரத்தை உயர்த்தி காட்டுவதற்காக பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் மற்றும் சிங்கப்பூர் வழியாக நிலக்கரி வந்ததாக ஆவணங்கள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதுடன்,
24 கப்பல்களில் கொண்டு வரப்பட்ட ஒட்டுமொத்த நிலக்கரியும் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அந்தமானில் மோசமான வானிலை ! 142 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை வந்ததது – மீண்டும் நாளை இயக்கப்படும் என ஆகாஷா ஏர்லைன்ஸ் அறிவிப்பு !
மேலும் இந்த நிலக்கரி முறைகேட்டின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.6,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இந்த நிலக்கரி ஊழல் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் ஏற்கனவே வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது இதுகுறித்து ஆதாரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.