பார்டர் கவாஸ்கர் தொடரின் அடிலெய்ட் டெஸ்ட் போட்டி -யில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்கள் ஆல் அவுட்டான நிலையில் ஆஸ்திரேலியா 337 ரன்களில் முழு விக்கெட்டை இழந்தது.
அடிலெய்ட் டெஸ்ட்: 337 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா – கிறுக்குப்பிடி போடும் இந்திய அணி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடக்கும் இரண்டாவது கிரிக்கெட் போட்டி நேற்று டிசம்பர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இருக்கும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் விளையாடி வருகின்றனர். அதன்படி டாஸ் வென்ற இந்திய அணி மொத்தம் 180 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது.
குறிப்பாக ஜெய்ஸ்வால் முதல் பந்தில் அவுட்டான நிலையில் கேஎல் ராகுல் 37 ரன்களும், சுப்மன் கில் 31 ரன்களும், நிதீஷ் குமார் ரெட்டி 42 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிசை தொடங்கிய நிலையில் 11 வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய உஸ்மான் 13 ரன்களில் அவுட் ஆனார். அதன் பிறகு பேட்டிங் செய்த நாதன் மற்றும் லாபுசாஞ்சே ஆகிய இருவரும் தனித்து நிதானமாக விளையாடி வந்தது.
மாணவர்களுக்கு இலவச பாஸ்போர்ட் – பணம் கட்ட வேண்டாம் – அரசு அதிரடி அறிவிப்பு!
அதன்பிறகு நாதன் 32 ரன்களிலும் ஸ்மித் 2 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். மார்னஸ் லபுஷேன் 65 ரன்களில் விக்கெட் இழந்தார். ஹெட் 43 ரன்களிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பும்ரா மற்றும் சிராஜ் தலா நான்கு விக்கெட்டுகளை எடுத்தனர். எனவே ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 157 ரன்கள் முன்னிலையில் இருந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்