
கார் விபத்தில் பலி
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் கொஞ்ச நாட்களில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் மும்மரமாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி எந்தெந்த கட்சி கூட்டணி வைக்கப் போகிறது என்பது குறித்த விவாதம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது சோகமா செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது அதிமுக பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக செயலாற்றி வந்தவர் தான் ரவிக்குமார். அவருடைய மனைவி நிர்மலாவும் அதிமுகவில் நல்ல பொறுப்பில் வகித்து வந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களின் சொந்த பணிக்காக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில், காரில் சென்ற போது சீமாவரம் பகுதியில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் முன்னாள் எம்.எல். ஏ ரவிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடைய மனைவி நிர்மலா சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னை மேயர் கார் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.