நெய்யில் கலப்படம் செய்தது உறுதி - கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை - அரசு அதிரடி!நெய்யில் கலப்படம் செய்தது உறுதி - கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை - அரசு அதிரடி!

திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து கேரளாவில் உள்ள நெய் உற்பத்தி செய்யும்  3 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை

திருப்பதி கோவிலில் கொடுக்கப்பட்ட லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்படுவதாக வெளியான செய்தி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் தரப்பினர் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் மக்கள் நெய்யை பயன்படுத்த தயக்கம் காட்ட ஆரம்பித்து விட்டனர். எனவே இதனை கருத்தில் கொண்டு பல்வேறு மாநில அரசுகளும் பல நிறுவனங்களின் நெய்யின் தரத்தை ஆய்வு செய்யத் தொடங்கி விட்டன. இந்நிலையில் கேரளாவில் உள்ள மூன்று நிறுவனங்கள் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

Also Read: இலவச தையல் இயந்திரம்:  தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

அதன்படி, ஜோய்ஸ், மேன்மா, எஸ்.ஆர்.எஸ் ஆகிய 3 நிறுவனங்களின் நெய் தயாரிப்பில் தாவர எண்ணெய், வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருந்தது ஆய்வில் தெரிய வந்தது. எனவே இந்த மூன்று நிறுவனங்களின் நெய்யை கேரளாவில் வாழும் மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று  தடை விதித்து கேரள மாநில உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்

சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்

இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் –  அரசு போட்ட அதிரடி உத்தரவு!

கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *