Earbuds பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்Earbuds பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

                      தற்போது இருக்கும் இளைய தலைமுறையினர் வேலைக்கு செல்லும் போதும் வரும் போதும் வீடுகளில் இருக்கும் போதும் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் போதும் மறக்காமல் எடுத்துச் சொல்லும் ஒரு பொருளாக இருப்பது வயர்லெஸ் Earbuds. Earbuds பாடல் கேட்க மற்றும் மற்றவர்களுடன் பேசுவதற்கு என பயன்படுத்தப்படுகின்றது. இதனால் சில நன்மைகள் இருந்தாலும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகமாக இருக்கின்றது. Earbuds பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் அறிந்து கொள்வோம்.

Earbuds பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

Wireless Earbuds வரலாறு :

                           முதன் முதலில் 1979ம் ஆண்டில் Sony நிறுவனம் Walkman என்னும் கைகளில் வைத்து பயன்படுத்த எளிய வகையில் Music Player அறிமுகப்படுத்தப்பட்டது. அவைகளில் பல குறைகள் இருந்தாலும் அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் குறைகளை நிறைவு செய்திருந்தது. பல முன்னணி நிறுவனங்களின் வயர் Earbuds மக்கள் மத்தியில் வரவேற்பை பெற தொடங்கியது. அதிலும் புதிய முயற்சியாக கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ONKYO W800BT என்னும் வயர்லெஸ் ஐயர்பட்களை உலகளவில் அறிமுகம் ஆனது. பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் ஒலியின் அளவுயும் சரியாக அமைந்திருப்பதால் பயனாளர் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் இந்தியாவிலும் Apple , Samsung , Google , Boat போன்ற நிறுவங்களின் வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் விற்பனை ஆக தொடங்கியது. 

வயர்லெஸ் ஐயர்பட்ஸ் விலை :    

                           பிரபலமான நிறுவனங்களின் வயர்லெஸ் இயர்பட்ஸ் ஒன்றின் விலை ரூ. 1,000 முதல் இரண்டு லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

                                     1. OnePlus – ரூ. 1,999 முதல் 

                                     2. Google – ரூ. 4,990 முதல் 

                                     3. Sony – ரூ. 3,3390 முதல் 

                                     4. Boat – ரூ. 999 முதல் 

                                     5. Samsung – ரூ. 999 முதல் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

சிறந்த 5 வயர்லெஸ் ஐயர்பட்ஸ் :

                            சந்தைகளில் பல வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் நாம் வாங்குவது இயர்பட்ஸ் விலை அதிகமாக இருந்தாலும் தரமானதாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம். அவைகளில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் இயபட்ஸ்களில் சிறந்த ஐந்து வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிந்து கொள்வோம்.

                                     1. Apple AirPods Pro 

                                     2. Samsung Galaxy Buds2 Pro 

                                     3. Sony WF-LS900N 

                                     4. boAt Airdopes 121v2

                                     5. onePlus Nord Buds 

தமிழகத்தில் 5 முக்கிய கடற்கரை சுற்றுலா தலங்கள் என்னென்ன ! வாங்க பாக்கலாம் !

வாங்கும் போது கவனிக்க வேண்டியவை :

                                      1. ANC இருக்க என்று பார்க்க வேண்டும்.

                                      2. ஒருவர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கின்ற வகையில் sponge இருக்கின்ற அல்லது sponge இல்லாத இயர்பட்ஸ் தேர்ந்தெடுக்க வேண்டும்.

                                     3. இயர்பட்ஸில் control செய்வதற்கு பட்டன் டைப் அல்லது டச் டைபில் இருக்கின்றதா என்பதை கவனித்து வாங்க வேண்டும். டைச் டைப் என்றால் பயன்படுத்துவதற்கு எதுவாக இருக்கும்.

                                     4. நாம் இயர்பட்ஸ் பயன்படுத்தி பாடல் அல்லது பேசும் போது ஒலியின் அளவு ஒன்று போல் இருக்க வேண்டும் என்றால் Bluetooth range சரியாக இருக்கின்றதா பார்த்து வாங்க வேண்டும்.  

                                      5. sound அதாவது ஒலியின் அளவு குறைவாக வைத்து பாடல் கேட்டும் போது சார்ஜ் நிலைக்கும் திறன் அதிகமாக இருக்கும். எனவே எவ்வளவு நேரம் சார்ஜ் செய்தல் இயர்பட்ஸ் எவ்வளவு நேரம் பயன்படுத்த முடியும் என்று கவனிக்க வேண்டும்.

                                      6. இவைகளை சார்ஜ் செய்ய பயன்படும் பின் c-டைப் அல்லது சாதாரண டைப் தான என்று பார்த்து வாங்க வேண்டும். 

                                      7. அதிகமாக பாடல் கேட்க வேண்டும் என்று இருப்பவர்கள் Driver Size Length சரியான அளவில் இருக்கின்ற என்பதை பார்க்க வேண்டும். இந்த length அதிகமாக இருந்தால் காது வலி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

                                      8. Audio Quality சரியான அளவு ஏறுகின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.

                                      9. Water Resistant இருக்கின்றதா என்பதை பார்க்க வேண்டும்.

                                    10. Warranty காலம் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் என்பதை கவனிக்க வேண்டும். அதிலும் கடை வரண்ட்டியா அல்லது கம்பெனி வரண்டியா என்பதையும் பார்க்க வேண்டும்.

                                    11. இரண்டு மொபைல்களில் ஒரு இயர்பட்ஸ் இணைத்துக்கொள்ளும் வசதியுடைய இயர்பட்ஸ்களை வாங்க வேண்டும்.  

                                    12. இயர்பட்ஸ் வாங்குவதற்கு கண்டிப்பாக பில் வாங்க வேண்டும். 

எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Earbuds பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

                                      1. இயர்பட்ஸில் இருக்கின்ற sponge காதுக்குள் பொருத்தமாக அமைந்து விடுவதால் அதிக நேரம் பயன்படுத்தும் போது காது கேட்காமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 

                                      2. விலை குறைவாக இருக்கின்றது என்பதால் தரமில்லாத இயர்பட்ஸ் பயன்படுத்த கூடாது. இதனால் இயர்பட்ஸ் விரைவில் பழுதாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 

                                      3. இயர்பட்ஸ்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமில்லாத இயர்பட்ஸ்களை பயன்படுத்தும் போது நோய் தோற்று ஏற்பட்ட காரணமாகின்றது. 

                                      4. அடுத்தவர்களின் இயர்பட்ஸ்களை பயன்படுத்தக்கூடாது. இதனால் நோய்தொற்று பரவாமல் இருக்கும்.

                                      5. இதிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம்முடைய மூளையை பாதிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

                                      6. இவைகளை பயன்படுத்திக்கொண்டு சாலையில் பயணிக்கும் போது விபத்துகள் ஏற்படுவதர்க்கு காரணமாகின்றது.

                                      7. இவைகள் கைக்கு அடக்கமாக சிறியதாக இருப்பதால் தொலைந்து விடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

இயர்பட்ஸ் எப்படி பயன்படுத்துவது :

                                      1. குறைந்த ஒளியின் அளவில் பயன்படுத்த வேண்டும். 

                                      2. சாலையில் நடந்து செல்லும் போது அல்லது வாகனம் ஓட்டும் போது பயன்படுத்தக்கூடாது.

                                      3. இரவில் தூங்கும் போது அதிகளவில் பயன்படுத்தக்கூடாது. 

Earbuds பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

இயர்பட்ஸ் பயன்பாட்டின் நன்மைகள் : 

                                      1. நாம் கேட்கும் பாடல் மற்றவர்களுக்கு எந்த ஒரு இடையூறுகளையும் ஏற்படுத்தாது.

                                      2. இசையின் அழகை துல்லியமாக உணர முடியும்.  

                                      3. உடற்பயிற்சி மற்றும் ஜிம் செல்பவர்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். 

           இயர்பட்ஸ்கள் பலரின் பயன்பாட்டிற்கு ஏதுவாக இருப்பதால் அவசிய பொருளாக மாறிவிட்டது. இவைகளை தேவைக்கு மட்டும் குறைந்த நேரம் பயன்படுத்தும் போது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *