தற்போது ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் பெண்கள் பேசக்கூடாது என அந்நாட்டை ஆளும் தலிபான் அரசு புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த புதிய சட்டத்திற்கு ஐ.நா சபை அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் பெண்கள் பேசக்கூடாது
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆப்கானிஸ்தான் :
தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான்கள் பெண்களுக்கு எதிரான கடுமையான பல சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான சட்டங்கள் :
ஆப்கனில் தலிபான் ஆட்சி அமைத்தது முதல் அங்குள்ள பெண்கள் படும் அவஸ்தை ஏராளம். அந்த வகையில் பெண்கள் பொது வெளியில் பர்தா அணிய வேண்டும். கல்லூரிகளுக்கு செல்லக்கூடாது, அத்துடன் ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெற கூடாது என பெண்கள் உரிமைக்கு எதிரான பல சட்டங்களை தலிபான் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து – 14 இந்தியர்கள் உயிரிழப்பு – தேடுதல் பணி தீவிரம்!
இந்நிலையில் ஆப்கானில் பெண்கள் பொது இடங்களில் பேசவோ அல்லது பாடவோ கூடாது என்றும் அந்நிய ஆண்களை பார்க்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்களின் குரல் கவர்ச்சியாக உள்ளதால் இந்த உத்தரவு போடப்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் அடக்குமுறையை தொடர்ந்து இந்த புதிய சட்டத்திற்கு ஐ.நா சபை அதிருப்தி தெரிவித்துள்ளது.