அரசு பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு. மத்திய அரசின் பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்த்தி வழங்குவதர்க்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்து உள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் வெளியிட்டு உள்ளார்.
அரசு பணியாளர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு ! மத்திய அரசு பணியில் இருப்பவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் !
அமைச்சரவை கூட்டம் :
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகவிலைப்படி உயர்த்துவது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அரசு பணியாளர்கள் மற்றும் அரசு பணியில் இருந்து விட்டு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைபடி உயர்த்துவது வழக்கம்.
4% உயர்வு :
தற்போது அரசு 42% அகவிலைபடி மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் 4% அகவிலைபடியை உயர்த்துவதர்க்கு மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்து உள்ளது. இதனால் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் அகவிலைபடி 46% ஆக இருக்கின்றது. இந்த அகவிலைபடி உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட உள்ளது.
லட்சக்கணக்கானோர் பயனடைவர் :
அகவிலைபடி 4% உயர்ந்துள்ளதால் 48.67 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும் 67.95 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களும் பயனடைய உள்ளார். கெஜட்டட் சாராத ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்குவதர்க்கும் அமைச்சரவை அனுமதி அளித்து உள்ளது.
Jio Financial மூலம் இனி வீடு , வாகன கடன் பெறலாம் !
இன்று மத்திய அரசு பணியாளர்களுக்கு போனஸ் வழங்க அனுமதி அளித்தது. மேலும் தற்போது அகவிலைபடி உயர்த்தி வழங்க அனுமதி அளித்து உள்ளது. மத்திய அரசு பணியாளர்களுக்கு இன்று டபுல் ஜாக்பாட் தான்.