விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் அவற்றை கிடங்குகளில் வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனைசெய்யப்பட்டதாகவும்,

அத்துடன் வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறைஅதிகாரிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு பல முக்கிய இடங்களில் சோதனை நடத்தினர்.

மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், மற்றும் உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி, பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள்,

இதனை தொடர்ந்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என மொத்தம் 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அதன் பிறகு இது தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று குட்கா வழக்கு தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த போது,

மேலும் இந்த வழக்கை எம்.பி, எல்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் – வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !

இதனை தொடர்ந்து முன்னாள் மற்றும் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதால் இந்த வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த வழக்கு தற்போது சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விசாரணையை வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *