தமிழகத்தில் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் :
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
சிபிஐ விசாரணை :
தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, இந்த கள்ளச்சாராய சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 61 பேர் மற்றும் எம்.பி.க்கள் 3 பேர் என அனைவரும் கவர்னரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா இன்று வேட்புமனுத்தாக்கள் – எதிர்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி வேண்டும் ராகுல் காந்தி கருத்து !
இதனையடுத்து இந்த சந்திப்பின்போது கள்ளச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது