எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது.
கடந்த சில மாதங்களாக அதிமுக கட்சியில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. அப்போது அக்கட்சியின் தலைவராக இருந்து வந்த எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். எனவே கட்சி இரண்டாக உடைந்த நிலையில், கட்சி கொடி சின்னம் யாருக்கு என்று உயர் நீதிமன்றத்தை நாடி எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை, உயர்நீதிமன்றம் உத்தரவு!!
இதனை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான நிலையில், அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. அந்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
மீண்டும் இந்திய அணியின் கேப்டனாகும் விராட் கோலி.., ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் ஓபன் டாக்!
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிச்சாமியின் மனுவுக்கு வருகிற ஜனவரி 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள்! சென்னை முதல் கன்னியாகுமரி வரை பவர் கட் இடங்கள்!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!
டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
Oneplus 13R இந்தியாவில் அறிமுகம்! ஆத்தி ஒரு போன் இவ்வளவு ரூபாயா?