நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.
எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல் நூதன முறையில் ஒட்டுக்கேட்பு
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் தற்போது தான் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது. அதாவது எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அதிமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கடிதம் எழுதியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, ” தமிழக உளவுத்துறை அதிகாரிகள் பெகாசஸ் உள்ளிட்ட மென்பொருள்களை பயன்படுத்தி ஒட்டு கேட்டு வருகின்றனர். தெளிவாக சொல்ல போனால் தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் எதிர்க்கட்சியினர்களின் தொலைபேசிகளை சட்டவிரோதமாக உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாக அவர் மீது அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த விஷயம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.