தமிழகத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை அரசு கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், ஏஐசிடிஇ சார்பில் பல்வேறு உதவித்தொகை வழங்கி வருகிறது. அதன்படி, கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேருக்கு ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதே போல் கல்லூரி மாணவர்களுக்கு வருடத்திற்கு 50 ஆயிரம் உதவித்தொகையை அளிக்கிறது. இதற்கு சாக்ஷம் கல்வி உதவித்தொகை என்று அழைக்கப்படுகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் – ஏஐசிடிஇ சாக்ஷம் உதவித்தொகை – விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க (நவம்பர் 30) இன்று கடைசித் தேதி ஆகும். எனவே ஏஐசிடிஇ சாக்ஷம் உதவித்தொகை விண்ணப்பிப்பது எப்படி? கல்வித் தகுதி என்ன? என்னென்ன ஆவணங்கள் முக்கியம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply for the Saksham Scholarship 2024)
- கல்லூரி மாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணையதளதிற்கு செல்ல வேண்டும்.
- இதையடுத்து ‘Students‘ என்னும் தெரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.
- OTR (One Time Registration) எனப்படும் ஒரு முறை விண்ணப்பப் பதிவை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதன்பின்னர் login செய்து ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் முக்கியம்?
- 12th மதிப்பெண் பட்டியல்
- வருமானச் சான்றிதழ்
- சாதிச் சான்றிதழ்
- கல்லூரி கட்டண ரசீது எண்
- வங்கி பாஸ்புக் (வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும்)
- ஆதார் அட்டை
- பதிவு எண்
- சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் – பிரகதி உதவித்தொகை திட்டம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? நாளை கடைசி நாள்!
விண்ணப்பிக்க தகுதி:
- பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ முதல் அல்லது 2வது ஆண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
- ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் படிக்க வேண்டியது கட்டாயம்.
- பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு குறைவில்லாமல் இருக்கக் கூடாது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்