தற்போது விமானத்தை போல அரசுப்பேருந்தில் ஏர் ஹோஸ்டெஸ் நடைமுறையை மகாராஷ்டிரா அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும் அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விமானத்தை போல அரசுப்பேருந்தில் ஏர் ஹோஸ்டெஸ்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஏர் ஹோஸ்டெஸ் :
மகாராஷ்டிரா அரசு பயணிகளை கவர விமானங்களில் இருக்கும் ஏர் ஹோஸ்டஸ் போல அரசு சொகுசு பேருந்துகளில் பணிப்பெண்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலெக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் இந்த பணிப்பெண்கள் அமர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவ்னெரி சுந்தரி :
இதனை தொடர்ந்து மும்பை-புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் ‘சிவ்னெரி சுந்தரி’ என்ற பெயரில் பணிப்பெண்களை பணியமர்த்த மகாராஷ்டிரா அரசு தற்போது முடிவு செய்துள்ளது. Air Hostess in Government Bus Maharashtra Govt Decides To Attract Passengers
மேலும் இப்பணிப்பெண்கள் சிவ்னெரி சுந்தரி என்று அழைக்கப்படுவார்கள் என்றும், அத்துடன் அவர்கள் பேருந்தில் ஏறும் பயணிகளை வரவேற்பது மற்றும் பயணத்தின்போது பயணிகளுக்கு உதவுவது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அக்டோபர் 6ம் தேதி தமிழகம் வருகை – விமானப்படை தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் !
காங்கிரஸ் கட்சி கண்டனம் :
இந்நிலையில் மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மாநிலத்தில் உள்ள அரசு பேருந்துகளின் மோசமான நிலை மற்றும் அரசு பேருந்து நிலையங்களில் உள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துவவதை விட்டுவிட்டு தேவையில்லாத வேலைகளில் அரசாங்கம் ஈடுபடுகிறது என்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேட்டிவார் கண்டனம் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள் :
தருமபுரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2024
பிரதமர் மோடி அக்டோபர் 6ம் தேதி தமிழகம் வருகை
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஆன்லைன் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை
தவெக கட்சியின் முதல் மாநாடு: நாளை பந்தக்கால் நடும் விழா