இன்று முதல் ஏர் இந்தியா விமானத்தில் முதல் முறையாக வைஃபை வசதி அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தாங்கள் நினைத்த இடத்திற்கு விரைவாக செல்வதற்கு விமான பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் பயணிகளை கவரும் விதமாக புது புது வசதிகளை செய்து கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஏர் இந்தியா நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் முதல் முறையாக வைஃபை வசதி .., குஷியில் பயணிகள்!!
அதாவது, ஏர் இந்தியா நிறுவனம் சார்பாக தற்போது, ஏர்பஸ் ஏ 350, போயிங் 787-9 மற்றும் ஏ321 நியோ உள்ளிட்ட விமானங்களை இயக்கி வருகிறது. எனவே இதுவரை எந்த நிறுவனமும் செய்யாத வசதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி, மேற்கண்ட விமானங்களில் வைஃபை இணையதள சேவையை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது. தெளிவாக சொல்ல போனால், இன்றைய நவீன உலகத்தில் இணையதளம் சேவை இன்றியமையாததாக இருக்கிறது. அதன் காரணத்தால் இந்த WIFI வசதி அறிமுகப்படுத்த இருக்கிறது.
தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!!
மேலும் இந்த வசதி விமானம் 10,000 அடிக்கு மேல் பறக்கும் போது பயணிகள் வைஃபை மூலம் தங்களுடைய லேப்டாப், ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளில் பயன்படுத்த அனுமதி உண்டு என்றும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வசதி பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து.., வெளியான முக்கிய அறிவிப்பு!
அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025.., விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் 2025 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ.., முழு விவரம் உள்ளே!!
தமிழ்நாட்டில் நாளை (03.01.2025) மின்தடை பகுதிகள் விவரம்! TNEB வெளியிட்ட ஏரியாக்களின் லிஸ்ட் இதோ!
சென்னையில் இன்று(31.12.2024) சீமான் கைது.., என்ன காரணம் தெரியுமா?