Home » செய்திகள் » ஏர் இந்தியாவுடன் இணைந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் – முன்னணி நிறுவனமாக மாறிய டாடா !

ஏர் இந்தியாவுடன் இணைந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் – முன்னணி நிறுவனமாக மாறிய டாடா !

ஏர் இந்தியாவுடன் இணைந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் - முன்னணி நிறுவனமாக மாறிய டாடா !

தற்போது ஏர் இந்தியாவுடன் இணைந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம், மேலும் இண்டிகோ விமான நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி டாடா தானே விமான நிறுவனம் தற்போது முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது.

மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா விமான சேவை நிறுவனம் முறைப்படி நேற்று இணைந்த நிலையில், இன்று முதல் ஏர் இந்தியா என்ற பெயரிலேயே அனைத்து விமானங்களும் இயக்கத் தொடங்கி உள்ளன. அந்த வகையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது.

இதனையடுத்து ஏற்கனவே டாட்டாவின் கைவசம் இருந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்கள், இன்று முதல் ஏர் இந்தியா விமானமாக வானில் பறக்கத் தொடங்கியுள்ளன. Vistara Airlines merged with Air India

அந்த வகையில் விஸ்தாரா விமானத்தின் நிறம் மற்றும் லோகோ மாற்றப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்களது விமான டிக்கெட்டுகளை ஏர் இந்தியா இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

இதையடுத்து ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அடங்கிய டாடா விமான போக்குவரத்து முன்னணி நிறுவனமாக மாறியது. மேலும் இண்டிகோ விமான நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி டாடா தானே விமான நிறுவனம் தற்போது முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top