விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் - டிக்கெட் விலை இரு மடங்கு உயர்வு - என்ன காரணம் தெரியுமா?விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ் - டிக்கெட் விலை இரு மடங்கு உயர்வு - என்ன காரணம் தெரியுமா?

Breaking News: விமான டிக்கெட் விலை இரு மடங்கு உயர்வு: தமிழகத்தில் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக விமான பயணத்தின் டிக்கெட் விலை திடிரென அதிகரித்து காணப்பட்டுள்ளது.

விமான டிக்கெட் விலை உயர்வு

நாளை சுதந்திர தினம்(ஆகஸ்ட் 15) மற்றும் சனி(ஆகஸ்ட் 17), ஞாயிறு(ஆகஸ்ட் 18) தொடர்ந்து விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் பயணிகள் செல்வதால் விமான கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, சென்னை To  தூத்துக்குடி செல்வதற்கு விமான கட்டணம் ரூ 4,301 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.10,796ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல் சென்னை To மதுரைக்கு செல்லும் விமான சேவை கட்டணம் ரூ.4,063 ஆக இருந்த நிலையில் இப்பொழுது ரூ.11,716 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் விமான பயண கட்டணம் 5,349 ரூபாயாகவும், சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல 7 ஆயிரத்து 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. airfare has doubled

Also Read: ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ் – மத்திய  அரசு அதிரடி நடவடிக்கை!

உள்நாட்டு விமான கட்டணமும் கடுமையாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மும்பை, டெல்லி மற்றும் அகமதாபாத் செல்லும் விமானங்களில் முதல் வகுப்பு கட்டணம் 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சேவை கட்டண உயர்வு இன்று மற்றும் நாளையும் இருக்கும் என்று விமானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. holidays

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

உலக யானைகள் தினம் 2024

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு

தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு ! 

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *