ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர் - முழு தகவல் இதோ !ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர் - முழு தகவல் இதோ !

தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வாகனங்கள் மற்றும் வீடுகள் அனைத்தும் நிலச்சரிவில் புதைந்ததால் 250க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலச்சரிவு சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஏர்டெல் வாடிக்கையாளர்களில் வேலிடிட்டி நிறைவடைந்து ரிச்சார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்கள் 1GB டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 100 SMS போன்ற சலுகைகள் இலவசமாக வழங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு – ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை – உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து !

அத்துடன் POSTPAID வாடிக்கையாளர்கள் தங்கள் ரிச்சார்ஜ் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *