ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் பிரபா இயக்குனருமான ஐஸ்வர்யாவின் படைப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் லீடு ரோலில் நடிக்க, ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை தான் பெற்றது. சொல்ல போனால் போட்ட முதலை கூட இந்த படம் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கிரிக்கெட் தொடர்பாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஒரு சில இடத்தில மட்டும் தான் கிரிக்கெட் வந்ததாக நெட்டிசன்கள் கூறி வந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் அதன் காரணம் குறித்து இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதாவது அதில் அவர், ” கிரிக்கெட் சம்பந்தமாக பல காட்சிகள் நான் எடுத்தேன். அந்த காட்சிகள் இருந்த ஹார்ட் டிஸ்க் காணாம போயிருச்சு. கிட்டத்தட்ட 10 கேமராக்கள் வைத்து கிரிக்கெட் போட்டியை ஷூட் செய்தேன். ஆனால் அது காணாமல் போய்விட்டது. ரீ ஷூட் போக டைம் இல்ல. அதனால் தான் இருக்கிறதை வைத்து எடிட் செய்தோம். அந்த ஹார்ட் டிஸ்க் மட்டும் கிடைத்திருந்தால், கண்டிப்பாக படம் பேசப்பட்டு இருக்கும் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.