Home » சினிமா » குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!

குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!

குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் OG சம்பவம்!!

நடிகர் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் என்பது குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

Good Bad Ugly:

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருக்கின்ற   திரைப்படம் தான் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில்  த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் சமீபத்தில் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் தற்போது இது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, அஜித்தின் Good Bad Ugly படத்தில் வில்லன் ரோலில் நடிகர் ரகுராம் தான் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. உடனே உங்களுக்கு யார் இந்த ரகுராம் என்று கேள்வி வரும். அவர் வேறு யாரும் இல்லை. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் வில்லன் கும்பலைச் சேர்ந்த இரட்டையர்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

டிராகன் கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்பாட்.. முன்னணி ஹீரோவுக்கு ஜோடியா?

வைபவின் பெருசு திரை விமர்சனம் இதோ.., குடும்பத்துடன் சிரித்து மகிழலாம்!!

ஜி.வி. பிரகாஷின் கிங்ஸ்டன் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ!!

நாளை ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட்.., இந்த ரேஸில் எந்த படம் வெற்றி பெறும்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top