தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு குட் பேட் அக்லி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித்குமாரின் குட் புக்கில் இடம் பெற்ற மூன்று நடிகர்கள் பற்றி யாருக்கும் தெரியாது. அவர்கள் யார் என்று இந்த தொகுப்பில் காணலாம்.
பிரகாஷ்ராஜ்
சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் ஒரு நடிகர் என்றால் அது பிரகாஷ் ராஜ் தான். அதனாலேயே இவரை அஜித்துக்கு ரொம்ப பிடிக்கும். சொல்லப்போனால் அவரிடம் இருந்து திரைத்துறையில் பல விஷயங்களை கற்றுக் கொண்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
வெற்றி துரைசாமி
அஜித்துக்கு நெருக்கமான நண்பர் என்றால் அது வெற்றி துரைசாமி தான். இவருடன் சேர்ந்து அஜித் போகாத பைக் டூரே இல்லை. பாசமாக நெருங்கி பழகும் அவரின் குணத்தை பார்த்து தான் அஜித் இவரை குட் புக்கில் வைத்துள்ளார். இப்படி இருக்கையில் கடந்த பிப்ரவரி மாதம் பல வருட நண்பனை அஜித் இழந்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன்
தற்போது அஜித்தை குட் பேட் அக்லி இயக்கத்தை உருவாக்கி வருபவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். சினிமாவுக்கும் ஆதிக்கும் இடையே உள்ள நெருக்கத்தை தான் அஜித்துக்கு ரொம்ப பிடிக்கும். எந்த தோல்வியை சந்தித்தாலும் அடுத்த கட்டத்திற்கு சென்று விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருவதால் தான் அஜித் இவரை குட் புக்கில் வைத்துள்ளார்.
LSG Vs PBKS: முதல் வெற்றியை நோக்கி லக்னோ அணி.., பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
இப்படி பிரகாஷ் ராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றி துரைசாமி ஆகியோர் அஜித்தின் குட் புக்கில் இருந்து வரும் நிலையில் ஒருவர் மட்டும் அஜித்தின் வெறுப்பை சம்பாதித்து உள்ளார். அது வேற யாரும் இல்லை, இயக்குனர் விக்னேஷ் சிவன் தான். அஜித்தின் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனரையே மாற்றிவிட்டார் அஜித்.