பிரபல நடிகர் அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது என்பது குறித்து முக்கியமான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மேலும் நடிகர் அஜித்துக்கு நடிப்பையும் தாண்டி கார் ரேஸ். பைக் ரேஸ், ட்ரோன் தயாரிப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது?.., வெளியான முக்கிய தகவல்!!!
அதன்படி, சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் அஜித் குமாரின் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். மேலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு நேரில் சென்று ஆதரவளித்தனர். இதனை தொடர்ந்து, இத்தாலியின் முகெல்லோவில் நடைபெற இருக்கும் 24H ஐரோப்பிய தொடர் மார்ச் 22, 23 தேதிகளில் நடைபெற இருக்கிறது.
அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வீடியோ வெளியீடு .., ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!!
அதே போல், வருகிற ஏப்ரல் மாதத்தில் பெல்ஜியத்தில் இருக்கும் ஸ்பா-ஃபிராங்கோர்ஷாம்ப்ஸ் என்ற இடத்தில் நடக்க இருக்கிறது. அதுமட்டுமின்றி, மே மாதத்தில் இத்தாலியின் மிசானோவில் மிச்சலின் 12H, செப்டம்பர் 27, 28 ஆம் தேதிகளில் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற இருக்கிறது. இதிலும் அஜித் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்.., வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!
பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!
சினிமாவுக்கு பிரேக் எடுக்கும் அஜித்குமார்?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
அஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.., சுட சுட வெளியான குட் நியூஸ்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!