ஷாக்கிங் நியூஸ்.., அஜித் நடித்த துணிவு பட வில்லன் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!!ஷாக்கிங் நியூஸ்.., அஜித் நடித்த துணிவு பட வில்லன் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவருடன் இணைந்து அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இதில் வில்லனாக நடித்த ஒருவர் தான் நடிகர் ரித்து ராஜ் சிங். இவர் பாலிவுட்டில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் இவர் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 59 வயதாகும் நடிகர் ரித்து ராஜ் சிங் கணைய அழற்சி (Pancreatic disease) பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது அவரின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஆலோசனை கூட்டம்.., தவெக கட்சி நிர்வாகிகள் 20 பேர் மீது அதிரடி வழக்குப்பதிவு.., தலைவர் விஜய்க்கு வந்த புது தலைவலி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *