
“விடா முயற்சி” ரிலீஸ்
நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய பிறந்த நாள் அன்று படத்தோட டைட்டில் வெளியானதில் இருந்து தற்போது ஒரு வருடம் முடிய போகும் நிலையில், இப்பொழுது வரை ஒரு அப்டேட் கூட படக்குழு வெளியே விடவில்லை. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்த கூட, படத்தோட ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்குச் செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அஜித் குமார் அஜித் மீண்டும் தனது பைக் டூர் பயணத்தை தொடங்கி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் “விடாமுயற்சி” படம் ரிலீஸ் தள்ளி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.