அஜித்தின் "Good Bad Ugly" படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு -  படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!அஜித்தின் "Good Bad Ugly" படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு -  படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அஜித்தின் “Good Bad Ugly” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு: தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார்1. கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற தீபாவளி பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் “Good Bad Ugly” படத்தில் நடிக்க அஜித் குமார் கமிட்டாகி இருக்கிறார். சமீபத்தில் இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு போஸ்டரை படக்குழு வெளியீட்டு இருந்தது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது என்றே சொல்லலாம்.

இருப்பினும் ஆழ்வார் படத்திற்கு பிறகு அஜித் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கும் படம் இதுவே ஆகும். எனவே இந்த படத்தை எதிர்பார்த்து தல ரசிகர்கள் வெறியோடு காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் Good Bad Ugly படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது அந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

  1. actor ajithkumar latest news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *