அஜித்துக்கு என்னதான் ஆச்சு?
தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது இவர் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தி டைட்டில் வைத்து ஒரு வருடம் கடக்க இருக்கும் நிலையில், தற்போது வரை படக்குழு எந்தவொரு அப்டேட்டும் கொடுத்த பாடில்லை. இதனால் ரசிகர்கள் வலிமை படத்துக்கு செய்ததை போன்று படக்குழு எங்கே சென்றாலும் அப்டேட் என்று கேட்டு தொல்லை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று அஜித்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் அவர் வெளிநாட்டுக்கு ஷூட்டிங் செல்லுவதால் வழக்கமான பரிசோதனைக்காக தான் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் நாளை வீட்டிற்கு சென்று விடுவார் என்றும் அவருடைய மேனேஜர் கூறினார். இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் ஷாக்கிங் நியூஸ் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும்,அதற்காக சிறிய அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த அறுவை சிகிச்சையை மதுரை மற்றும் கேரளாவை சேர்ந்த மருத்துவர்கள் தான் செய்தார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகள்
அரசியலில் பூந்து விளையாடும் தளபதி.., பர்ஸ்ட் மூவ்வே மெய்சிலிர்க்க வைத்த தவெக கட்சி தலைவர் விஜய்!!