
நடிகர் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி ஷூட்டிங் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
ஒரு சீனுக்காக உயிரை பணயம் வைத்த அஜித்
தென்னிந்திய தமிழ் சனிக்கு,சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் அஜித்குமார். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அஜித்துக்கு காதுக்கு அருகில் சிறிய கட்டி இருந்ததால் உடனே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, தற்போது மீண்டும் பைக் டூருக்கு கிளப்பியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வண்ணம் இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை அஜித்தின் மேனேஜர் தனது X வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த மாதம் நடைபெற்ற விடாமுயற்சி ஷூட்டிங் போது கார் விபத்துக்குள்ளாவது போல் படமாக்கப்பட்டது. அந்த வீடியோவை தான் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் காரை அஜித் ஓட்ட அருகில் பிக்பாஸ் ஆரவ் அமர்ந்துள்ளார். விபத்து நடக்க போகிறது என்று பயத்துடன் ஆரவ் அமர்ந்திருப்பது போல் தெரிகிறது. இப்படி ஒரு சீனுக்கு டூப் போடாமல் அஜித் ஆரவ் உயிரை பணயம் வைத்து நடிக்க வேண்டுமா என்று ரசிகர்கள் கவலையாக கேட்டு வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.